250 கிலோ நாட்டு உப்பில்கலாம் உருவப்படம்

by Editor / 15-10-2021 03:43:09pm
250 கிலோ நாட்டு உப்பில்கலாம் உருவப்படம்


பரமக்குடியில் 250 கிலோ நாட்டு உப்பில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் உருவப் படத்தை வரைந்து மாணவர்கள் அசத்தியுள்ளனர்.


முன்னாள் குடியரசுத் தலைவர் ஏபிஜே.அப்துல் கலாமின் 90-வது பிறந்தநாள் நாளை அனுசரிக்கப்பட உள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் உப்புக் காற்றை சுவாசித்து வாழ்ந்த அவரின் நினைவைப் போற்றும் வகையில் பரமக்குடியில் தனியார் பயிற்சி நிறுவனம் சார்பில் 250 கிலோ நாட்டு உப்பில் அவரது உருவப்படத்தை வரைந்துள்ளனர்.கடலின் நிறமான நீல நிற சட்டை அணிந்த மார்பளவு கொண்ட 15 அடி நீளம், 10 அடி அகலத்தில் 20 மாணவர்கள் 3 மணி நேரத்தில் அப்துல் கலாமின் உருவப் படத்தை தரையில் வரைந்து அசத்தியுள்ளனர்.


இதுகுறித்து பயிற்சி மைய நிறுவனர் கோபிநாத் கூறுகையில்:முன்னாள் குடியரசு தலைவர் ஏபிஜே அப்துல் கலாமின் 90வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவப்படத்தை நாட்டு உப்பு பயன்படுத்தி வரையப்பட்டுள்ளது.ராமேஸ்வரம் பகுதியில் வாழ்ந்த அவரது நினைவைப் போற்றும் வகையில் மற்றும் நாட்டு உப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அப்துல்கலாமின் உருவப்படம் வரையப்பட்டுள்ளது என்றார்.

 

Tags :

Share via