நீடில் இல்லாத லேசர் ஊசி: நெதர்லாந்து விஞ்ஞானிகள் சாதனை

by Editor / 15-10-2021 05:30:30pm
நீடில் இல்லாத லேசர் ஊசி: நெதர்லாந்து விஞ்ஞானிகள் சாதனை

 

நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாமில் நகரைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் நீடில் இல்லாத ஊசியை வடிவமைத்துள்ளனர். புதிய தொழில்நுட்பத்துடன் உருவாக்கியுள்ள இந்த ஊசி மூலம் வலியில்லாமல் மருந்தை உடலில் செலுத்தி விடலாம்.
நீடில் இல்லாத இந்த ஊசியில் ஒரு சிறிய லேசர் பொருத்தப்பட்டுள்ளது. இதன் வழியாக மருந்து நொடியில் உடலுக்குள் செலுத்தப்படுகிறது. தோல் பகுதியில் உள்ள மிகச் சிறிய துவாரங்களை பயன்படுத்தி லேசர் மூலம் மருந்து செலுத்தப்படுவதால் மிகக் குறைந்த நேரத்திலேயே இந்த ஊசி மருந்தை உடலுக்குள் செல்கிறது.


இதனால் வலியை கண்டு அஞ்சும் மக்கள் தைரியமாக மருத்துவமனை சென்று இந்த ஊசியைப் போட்டுக் கொள்ள முன் வருவார்கள் என்று நம்பப்படுகிறது. சாதாரண ஊசி செலுத்தும்போது தோலின் மேற்புறத்தில் துளை போட்டு மருந்து செலுத்தப்படுவதால் நமக்கு வலி ஏற்படுகிறது.


ஆனால் இந்த நீடில் இல்லாத லேசர் ஊசியில் எந்தவித வலியும் இருக்காது என்பதால் எதிர்காலத்தில் மக்கள் இந்த ஊசியை விரும்புவார்கள் என ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இந்த லேசர் ஊசி விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Tags :

Share via