ரூ.27.22 கோடிக்கு சொத்து குவித்த விஜயபாஸ்கர்

by Editor / 18-10-2021 07:35:20pm
ரூ.27.22 கோடிக்கு சொத்து குவித்த விஜயபாஸ்கர்

 

தமிழக அரசில் சுகாதாரத்துறை அமைச்சராக பதவி வகித்தவர் சி. விஜயபாஸ்கர். இவருக்கு சொந்தமான 48 இடங்களில்  தமிழக இலஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டு வந்தனர்.. மேலும், அமைச்சராக பதவி வகித்து வந்த காலத்தில், அவர் வருமானத்தை விட அதிகளவு சொத்து சேர்த்ததாகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.


கடந்த 2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது தனது வேட்புமனு தாக்கல் பிரமாண பத்திரத்தில் தனது சொத்து மதிப்பு ரூ. 6 கோடி 44 லட்சத்து 91 ஆயிரத்து 310 என்று தெரிவித்துள்ளார். ஆனால் தற்போது நடத்தப்பட்ட லஞ்ச ஒழிப்பு ஆய்வில் அவர் சொத்து பல மடங்கு அதிகரித்துள்ளது தெரிய வந்தது. 1.4.2016 முதல் 31.3.2021 வரையில் அவரது சொத்து மதிப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


விஜயபாஸ்கரின் மனைவியின் பெயரில் ரூ.27.22 கோடி அளவில் சொத்து இருப்பதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், விஜயபாஸ்கரின் உதவியாளர் சீனிவாசன் இல்லத்திலும் சோதனை நடந்தது. சென்னை சேத்துப்பட்டில் அமைந்துள்ள விஜயபாஸ்கரின் இல்லம், விஜயபாஸ்கரின் சகோதரர் உதயகுமார், சகோதரி, மாமனார் வீட்டிலும் சோதனை நடந்தது. முன்னாள் அமைச்சருடன் தொழில் செய்து வந்தவர்களின் விபரமும் சேகரிக்கப்பட்டது. இந்நிலையில், விஜயபாஸ்கர் வீடு, அலுவலகத்தில் இருந்து தங்க நகைகள் 4.87 கிலோ கைப்பற்றப்பட்டுள்ளது. ரூ.23.85 இலட்சம் ரொக்கம் கைப்பற்றப்பட்டுள்ளதாக இலஞ்ச ஒழிப்புத்துறை அறிவித்துள்ளது. மேலும், 19 ஹார்ட் டிஸ்க் உட்பட முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. 138 கனரக வாகனத்தின் ஆவணமும் கைப்பற்றப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via