மழைக்கால முன்னெச்சரிக்கை மின்வாரிய அதிகாரிகளுடன் அமைச்சர் செந்தில்பாலாஜி ஆலோசனை

by Editor / 22-10-2021 06:57:52pm
மழைக்கால முன்னெச்சரிக்கை மின்வாரிய அதிகாரிகளுடன் அமைச்சர் செந்தில்பாலாஜி ஆலோசனை


தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக தலைமையகத்தில் 24 மணி நேர மின் நுகர்வோர் சேவை மையமான மின்னகத்தில் பெறபட்ட புகார்கள் குறித்தும் புகார்மீது மேற்கொண்ட நடவடிக்கைகள் மற்றும் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட பின் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அதிகாரிகளுடன் அதிகாரிகளுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடத்தினார்.


இது குறித்துதமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம் வருமாறு
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக தலைமையகத்தில் செயல்பட்டுவரும்  24 மணி நேர மின் நுகர்வோர் சேவை மையமான மின்னகத்தில்  மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ராஜேஷ் லக்கானி மற்றும் இயக்குநர்கள், உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


பின்னர்,  அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்தாவது;மின்னகத்தில் மின் நுகர்வோர்களால் பெறப்பட்ட 98% புகார்களுக்கு இதுவரை தீர்வு காணப்பட்டுள்ளது. இதுவரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த 5 மாதங்களில் தமிழ்நாட்டில் 25,292 மின் கம்பங்கள், மாற்றப்பட்டுள்ளன தாழ்வான நிலையிலிருந்த மின் கம்பிகள் 48,279 இடங்களில் சரி செய்யப்பட்டுள்ளன, 700 மின் பெட்டிகள் (பில்லர் பாக்ஸ்) உயர்த்தப்பட்டுள்ளன. மேலும் 7,000 சாய்ந்த மின் கம்பங்கள் சரி செய்யப்பட்டுள்ளன. 13,500 பழுதடைந்த பீங்கான், இன்சூலேட்டர்கள் சரிசெய்யப்பட்டிருக்கின்றன பருவமழை காலத்தை எதிர்கொள்ள மின்சார வாரியம் பல்வேறு முன்னேற்பாடுகளை செய்துள்ளது.

குறிப்பாக 93,881 மின் கம்பங்கள், 19,826 கி.மீ மின் கம்பிகள், 4,600 மின்மாற்றிகள், 15,600 கி.மீ தாழ்வழுத்த புதைவடங்கள், 50 கி.மீ அளவிற்கு உயரயழுத்த புதைவடங்கள் தற்போது தயார் நிலையில் கையிருப்பு வைக்கப்பட்டுள்ளது.  தமிழ்நாட்டில் வாரியத்தின் நிறுவுதிறன் 4,320 மெகாவாட் ஆகும்.  இதில் கடந்த கால ஆட்சியில் 1,800 மெகவாட் அளவு தான் உற்பத்தி செய்தார்கள்.  தற்போது சொந்த உற்பத்தி தற்போது 3,500 மெகாவாட் அளவிற்கு உயர்ந்துள்ளது.


கன்னியாகுமரியில் மழையினால் பாதிக்கப்பட்ட 101 மின்மாற்றிகளில் 14 மின்மாற்றிகள் பழுதடைந்தன.  அவற்றை சரிசெய்ய மதுரை மற்றும் திண்டுக்கலிலிருந்து மின் மாற்றிகள் கொண்டுவரப்பட்டு அனைத்தும் சரி செய்யப்பட்டுவிட்டன.என்று தெரிவித்தார்.

 

 

Tags :

Share via