வங்கதேசத்தின் நற்பெயரைக் கெடுக்கவே இந்துக்கள் மீது திட்டமிட்டு தாக்குதல்: வங்கதேச பிரதமர்...

by Admin / 25-10-2021 03:12:54pm
வங்கதேசத்தின் நற்பெயரைக் கெடுக்கவே இந்துக்கள் மீது திட்டமிட்டு தாக்குதல்: வங்கதேச பிரதமர்...

 

இந்துக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் வங்கதேசத்தின் நற்பெயரைக் கெடுக்கும் நோக்கத்தில் சிலரால் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளதாக வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா குற்றச்சாட்டியுள்ளார்.

துர்கா பூஜை கொண்டாட்டத்தின் போது இஸ்லாமியா்களின் புனித நூல் அவமதிக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவியது. இதையடுத்து, கடந்த அக்டோபா் 13-ஆம் தேதி ஹிந்து கோயில்கள் பல சேதப்படுத்தப்பட்டன. கடந்த அக்டோபா் 17-ஆம் தேதி இந்துக்களின் 66 வீடுகளை வன்முறையாளா்கள் சேதப்படுத்தினா். அவற்றில் 20 வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. பல்வேறு மாவட்டங்களுக்குப் பரவிய இந்த வன்முறையில் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனா்.

இந்த வன்முறை தொடா்பாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து இதுவரை 600 பேரை அந்நாட்டு போலீஸாா் கைது செய்துள்ளனா். இந்த வன்முறைக்குக் காரணமான முக்கிய நபராகக் கருதப்படும் இக்பால் ஹோஸைன் என்ற நபரை போலீஸாா் கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்த நிலையில், இரண்டாவது முக்கிய நபராக கருதப்படும் ஷைகத் மண்டல் என்ற நபரை சனிக்கிழமை கைது செய்தனா்.

இந்த நிலையில், ஹிந்துக்கள் மீதான வன்முறை சிலரால் திட்டமிட்டு நடத்தப்பட்டிருப்பதாக ஷேக் ஹசீனா குற்றச்சாட்டியுள்ளார். இது குறித்து செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த ஷேக் ஹசீனா, வங்கதேசத்தை ஒருவராலும் பின்னுக்குத் தள்ள முடியாது அண்மையில் நடைபெற்ற சில அசம்பாவித சம்பவங்கள் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளன. வங்கதேசத்தின் நற்பெயரை கெடுக்கும் நோக்கத்துடன் இந்த வன்முறை நடத்தப்பட்டுள்ளது என்றார்.

 

Tags :

Share via