சீனா கொண்டு வந்துள்ள நில எல்லை சட்டம்...  இந்தியா கடும் கண்டனம்...

by Editor / 28-10-2021 04:53:33pm
சீனா கொண்டு வந்துள்ள நில எல்லை சட்டம்...  இந்தியா கடும் கண்டனம்...

 

சீன அரசின் ஒருதலை பட்சமான புதிய நில எல்லை சட்டத்துக்கு, மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.
 
இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே நீண்ட நெடுங்காலமாக எல்லை பிரச்சினை இருந்து வருகிறது. இந்த தருணத்தில் எல்லைகளை பாதுகாப்பது, சுரண்டுவது தொடர்பாக, சீன நாடாளுமன்றம் ஒரு சட்டம் இயற்றி உள்ளது.

நில எல்லை சட்டம் என்ற பெயரில் இயற்றப்பட்டுள்ள இந்த சட்டம், அடுத்த ஆண்டு ஜனவரி 1-ம் தேதி நடைமுறைக்கு வருகிறது.

 இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேசிய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, புதிய நில எல்லை சட்டத்தை காரணம் காட்டி, இந்திய-சீன எல்லை பகுதிகளில் ஒருதலைப்பட்சமாக நிலைமையை மாற்றக்கூடிய நடவடிக்கைகளை சீனா தவிர்க்கும் என எதிர்பார்ப்பதாக கூறியுள்ளார்.

எல்லையில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை பேணுவதில் இரு நாடுகளும் ஏற்கனவே எட்டியுள்ள உடன்படிக்கையில், அத்தகைய ஒருதலைப்பட்ச நடவடிக்கைகள் தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

Tags :

Share via