மரம் விழுந்து உயிரிழந்த காவலர் உடலுக்கு முதல்வர் மலர்வளையம் வைத்து அஞ்சலி 

by Editor / 02-11-2021 07:21:43pm
மரம் விழுந்து உயிரிழந்த காவலர் உடலுக்கு முதல்வர் மலர்வளையம் வைத்து அஞ்சலி 

சென்னை தலைமைச் செயலகத்தின் நான்காவது நுழைவு வாயில் அருகே உள்ள முதல்வர் தனிப்பிரிவு அலுவலகத்தில் முத்தியால்பேட்டை போக்குவரத்து காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரியும் கவிதா  ராயபுரம் போக்குவரத்து காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரியும் முருகன் ஆகியோர் இன்று (2ம் தேதி) காலை 9 மணியளவில் முதலமைச்சர் தனிப்பிரிவு அருகில் உள்ள மரம் யாரும் எதிர்பாராத விதமாக வேராடு சாய்ந்தது. அப்போது அங்கு பணியில் இருந்து முத்தியால் பேட்டை காவல்நிலைய போக்குவரத்துக் காவலர் கவிதா மரத்தின் அடியில் சிக்கி உயிரிழந்தார். உடன் பணியில் இருந்த ராயபுரம் போக்குவரத்துக் காவலர் முருகன் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். அவர் உடனடியாக அவசர ஊர்தி மூலம் அழைத்துச் செல்லப்பட்டு ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பெண் காவலர் உயிரிழந்த தகவல் அறிந்து வந்த தலைமைச் செயலாளர் இறையன்பு, டிஜிபி சைலேந்திரபாபு ஆகியோர் நிகழ்விடத்தில் ஆய்வு செய்ததோடு, விபத்து குறித்து கேட்டறிந்தனர்.

மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சிப் பணியாளர்கள் ஈடுபட்டனர். இதனிடையே பெண் காவலர் கவிதா உயிரிழந்தது கேட்டு அதிர்ச்சியுற்றதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார். கவிதாவின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகவும், முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து 10 லட்சம் ரூபாயை உதவித் தொகையை வழங்க உத்தரவிட்டார்.மேலும் காவலரது உடலுக்கு முதல்வர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

 

Tags :

Share via