காய்கறிகள் விலை உயர்வால் பொதுமக்கள் கவலை

by Admin / 12-11-2021 06:29:29pm
 காய்கறிகள் விலை உயர்வால் பொதுமக்கள் கவலை

திருப்பூர் மாவட்டத்தில் காய்கறிகள் விலை உயர்வால் பொதுமக்கள் கவலை

இரண்டு வாரங்களுக்கு முன்பு ஒரு கிலோ ரூ.20க்கு விற்பனை செய்யப்பட்ட சின்ன வெங்காயம் தற்போது ஒரு கிலோ ரூ.60 வரை விற்பனை செய்யப்படுகிறது.

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் புதிய ஆயக்கட்டு பகுதியில் பராமரிப்பு குறைவான விவசாயிகளின் விருப்ப பயிராக தக்காளி உள்ளது.

நூற்றுக்கணக்கான ஏக்கரில் இரண்டு பருவங்களில் தக்காளி நடவு செய்யப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பு கிராமங்களில் சில்லரை விற்பனையில் தக்காளி கிலோ ரூ. 30 என்றளவில் இருந்தது.
 
இதனால் தக்காளிக்கு நல்ல விலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள், தக்காளி சாகுபடி செய்தனர். ஒரு மாதத்திற்கு முன்பு தக்காளி அறுவடை தொடங்கும் போது கிலோ ரூ.10-க்கும்  குறைவாக விற்பனையானது.

ஆனால் தற்போது தக்காளியின் விலை சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. சந்தை நிலவரத்தின்படி ஒரு கிலோ ரூ.50 வரை விற்பனையாகிறது. வரத்து குறைவாக உள்ளதால் அருகில் உள்ள நகரம் மற்றும் கிராமப்புறங்களில்  கிலோ ரூ. 80 அளவுக்கு விலை உயர்ந்துள்ளது.

இதே போல கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு ஒரு கிலோ ரூ.20க்கு விற்பனை செய்யப்பட்ட சின்ன வெங்காயம் தற்போது ஒரு கிலோ ரூ.60 வரை விற்பனை செய்யப்படுகிறது. வரத்து குறைவால் இத்தகைய மாற்றம் ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், காய்கறி விலை தொடர்ந்து அதிகரிப்பதால் நடுத்தர மக்கள் மிகவும் சிரமப்படுகிறோம். அரசு நடவடிக்கை மேற்கொண்டு, விலையை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்றனர்.

 

Tags :

Share via