புண்ணியமான காலம் என்று சொல்லப்படுவது எதனை?

by Admin / 25-11-2021 12:45:35am
புண்ணியமான காலம் என்று சொல்லப்படுவது எதனை?

புண்ணியமான காலம் என்று சொல்லப்படுவது எதனை?
சூரியன் தெற்கிலிருந்து வடக்கு நோக்கிச்செல்லும் காலம்உத்தராயணம் என்று அழைக்கப்படுகிறது.இது தை,மாசி,பங்குனி,சித்திரை,வைகாசி,ஆனி இந்த ஆறு மாத காலமாகும்.இவை தேவர்களின் ஒரு பகல் பொழுது
காலமாகும்என்று ேஜாதிட சாஸ்திரம் சொல்கிறது.அதனால்,இது புண்ணிய காலமாக கருதப்படுவதால் இம் மாதத்தில் திருமணம் செய்வது சிறப்பு.

நல்ல ஹோரை பார்த்து செய்யுங்கள் என்று சொல்கிறார்களே?அது என்ன?
 ஹோரை ஏழு வகைப்படும் இது ஒரு மணி நேரத்துக்கு ஒரு ஹோரை என்று கணக்கிடப்படும்.சூரியன்,சுக்கிரன்,புதன்,சந்திரன்,சனி,குரு,செவ்வாய் என தினத்துக்கு ஒன்று.அந்தந்த கிழமையை அடிப்படையாக வைத்து வரும்.ஞாயிறு காலை 6.00மணிமுதல்7.00மணிவரை சந்திர ஹோரை,புதன்கிழமை புதன்ஹோரை,வியாழன் குரு ஹோரை,வெள்ளி சுக்கிர ஹோரை,சனிக்கிழமை சனி ஹோரை
வளர்பிறையில் புதன்,வியாழன்,சுக்கிரஹோரை,சந்திர ஹோரையில் நல்ல செயல்கள் செய்யலாம்.ஒரு நாளுக்கு பதினாறு முகூர்த்தங்கள்.ஒரு முகூர்த்தம் என்பது ஒன்னரை மணி நேரமாகும்.உத்தி,அமிர்தம்,லாபம்,தனம்,சுகம் என்றமுகூர்த்த நேரங்களில் சுப காரியங்கள் செய்யலாம்.மற்ற காலங்கள் ,ராகு,எமகண்டங்கள் நல்ல காரியம் செய்வதை தவிர்க்க வேண்டும்.

 

Tags :

Share via