பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்துகிறார் ரம்யா கிருஷ்ணன்

by Admin / 27-11-2021 12:31:33pm
பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்துகிறார் ரம்யா கிருஷ்ணன்

பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்துகிறார் ரம்யா கிருஷ்ணன்

பிக்பாஸ்  தொடங்கியதிலிருந்து  தமிழ் நிகழ்விற்கு கமல்ஹாசன் ஒருங்கிணைப்பாளராக இருந்து நடத்தி வருகிறார். பிக்பாஸ் 5 சீசனிலும் அவரே தொடர்கிறார்.இந்நிலையில் ,அமெரிக்கா சென்று திரும்பிய அவருக்குக்கொரோனா தொற்றிருப்பது கண்டறிய பட்டு   மருத்துவ மனையில்  சிகிச்சை பெற்று வருகிறார். இந்த வாரம் வைல்ட் கார்ட் மூலம் ,வெளியே சென்று,திரும்பி வந்துள்ள அபிேஷக்,தொலைக்காட்சி நடிகர் சஞ்சய் உள்ளே வந்திருக்கிறார்கள்.இந்த வார போர்டிங் ஸ்கூலில் அக்ஸராவின் அடங்கா செயல்களைக்கண்டு கொதிருக்கும் ரசிகர்கள், யார் வெளியேற போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள் ,கமல்ஹாசன் கொரோனா தனிமைப்படுத்துதலில் இருப்பதால், இந்த வாரம் சனி,ஞாயிறு இரு தினங்களில் நிகழ்ச்சியை யார் நடத்தப்போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கையில், விஜய் சேதுபதியா?ஸ்ருதி ஹாசனா என்கிற ஊகத்திற்கு முற்றுப்புள்ளியாக ரம்யா கிருஷ்ணன் வரஉள்ளதாக தகவல் கசிந்துள்ளது.ரம்யா கிருஷ்ணன் ஏற்கனவே, தெலுங்கு பிக்பாஸ்  நிகழ்ச்சியில் பங்கெடுத்த அனுபவம் இருப்பதால், இந்த வார பிக்பாஸில் ரம்யாவை எதிர்பார்க்கலாம்.

 

Tags :

Share via