குற்றால அருவிகளில் தொடர்ந்து 3வது நாளாக வெள்ளம். சிறப்பு அதிகாரி ஆய்வு.

by Editor / 30-11-2021 05:09:35pm
குற்றால அருவிகளில் தொடர்ந்து 3வது நாளாக  வெள்ளம். சிறப்பு அதிகாரி ஆய்வு.

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த 3 நாட்களாக  பலத்த மழை பெய்து வருகின்றது மழையின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் உள்ள நீர்நிலைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகின்றது இந்த நிலையில்   மாவட்டம் முழுவதும்  பெய்த கன மழையின் காரணமாக குற்றாலம் மெயினருவியில் 28 ஆம் தேதி காட்டாற்று வெள்ளம் உருவாகியாது.குற்றால அருவியில் உருவான மழைவெள்ளம்  பஜார் பகுதிகளில்  பெருக்கெடுத்து ஓடியது.குற்றால நாதர் ஆலயத்தையும் வெள்ளம் சூழ்ந்தது.குற்றால அருவிகளில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக ஆறுகளில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. குற்றாலமெயினருவிப்பகுதியில் ஏராளமான அளவு சேதங்கள் ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று இரவு முதல் இன்றுய் அதிகாலைவரை வனப்பகுதியில் மட்டுமின்றி மாவட்டம் முழுவதும் கனமழை பெய்தது.இதன் தொடர்ச்சியாக  குற்றாலம் மெயினருவியில்  3வது நாளாக  வெள்ளம் பாதுகாப்பு வளையத்தைத்தாண்டி கொட்டிவருகிறது.குற்றாலம் மெயினருவியைத்தொடர்ந்து பழைய குற்றால அருவியில் படிக்கட்டுக்களில் தண்ணீர் சென்றுவருகிறது.ஐந்தருவியில் வெள்ளம் கொட்டிவருகின்றது.மேலும் வடகிழக்கு பருவமழையை கண்காணிக்குமதிகரியாக நியமிக்கபட்டுள்ள சிறப்பு அதிகாரி  எஸ்.ஜே.சிரு தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் சிறப்பு கூட்டம் நடத்தப்பட்டு பின்னர் அவர் குற்றால அருவிப்பகுதிகளில் ஆய்வுப்பணிகளை மேற்கொண்டார்.

 

Tags :

Share via