நீட் தேர்வை ரத்து செய்யக் கோரும் தனிநபர் மசோதாவை மாநிலங்களவையில் திமுக எம்.பி. வில்சன் அறிமுகம் செய்தார்.

by Editor / 03-12-2021 04:06:37pm
நீட் தேர்வை ரத்து செய்யக் கோரும் தனிநபர் மசோதாவை மாநிலங்களவையில் திமுக எம்.பி. வில்சன் அறிமுகம் செய்தார்.

நீட் தேர்வை ரத்து செய்யக் கோரும் தனிநபர் மசோதாவை மாநிலங்களவையில் திமுக எம்.பி. வில்சன் அறிமுகம் செய்தார்.

முன்னதாக, நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கான விலக்கை எப்பாடுபட்டாவது கொண்டு வந்து விடுவோம்' என திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.

பிரதமருக்கு கடிதம் எழுதுவது உள்ளிட்டவற்றை மேற்கொண்டு வரக்கூடிய சூழலில், அதற்கான ஒரு முயற்சியாக திமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் வில்சன் இந்த தனிநபர் மசோதாவை அறிமுகம் செய்தார். 

தனிநபர் மசோதா என்பது ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் இருக்கக்கூடிய மிக முக்கியமான அதிகாரங்களில் ஒன்றாகும். இதன்மூலமாக நாட்டின் எந்த ஒரு பிரச்னை குறித்தும் புதிய சட்டத்தையோ அல்லது சட்டத் திருத்தத்தைக் கொண்டுவருவதற்கான மசோதாக்களை தாக்கல் செய்ய அவர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

Tags :

Share via