மேற்கு வங்கத்தில் மம்தா அபார வெற்றி 

by Editor / 02-05-2021 04:57:37pm
மேற்கு வங்கத்தில் மம்தா அபார வெற்றி 

 


மேற்கு வங்க மாநிலத்தில் 292 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கையில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 206 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. பாஜக 84 தொகுதிகளிலும், பிற கட்சிகள் இரண்டு தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. நந்திகிராம் தொகுதியில் பின்னடைவில் இருந்து மம்தா பானர்ஜியும் முன்னிலை பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வெற்றி பெற்றுள்ளார். தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரியை விட 1200 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் மம்தா ஆட்சியில் மேற்கு வங்கத்தில் ஆட்சி அமைய உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via