அதிமுக முன்னாள் அமைச்சர் மகன் குண்டர் சட்டத்தில் கைது.

by Editor / 16-12-2021 06:47:01pm
அதிமுக முன்னாள் அமைச்சர் மகன் குண்டர்  சட்டத்தில் கைது.

குமரி மாவட்டம் பகுதியிலுள்ள ஒரு ஏற்றுமதி நிறுவனத்தில் இருந்து கடந்த மாதம் 26ம் தேதி ரூ.1,10,கோடி ரூபாய் மதிப்பிலான 16 டன் முந்திரி பருப்பை ஏற்றிய லாரி தூத்துக்குடி துறைமுகம் நோக்கி சென்றது. இந்த லாரியை காரில் வந்த கும்பல் பொட்டலூரணி விலக்கு பகுதியில் வழிமறித்து லாரி ஓட்டுநர் ஹரியுடன் லாரியையும் கடத்தி சென்றது.

இந்த வழக்கில் புதுக்கோட்டை காவல் நிலைய போலீசார் 1) ஞானராஜ் ஜெபசிங் (39) த/பெ. செல்லப்பாண்டியன், அன்னை தெரசா நகர், தூத்துக்குடி, 2) விஷ்ணுபெருமாள் (26) த/பெ. சக்திவேல், பிரையண்ட்நகர், தூத்துக்குடி, 3) பாண்டி (21), த/பெ. முனியசாமி, நேசமணி நகர், முள்ளக்காடு, 4) மாரிமுத்து (30), த/பெ. கணபதி, எம்.ஜி.ஆர் நகர் பாலம், தூத்துக்குடி, 5) செந்தில்முருகன் (35), த/பெ. வேலு, முத்துவிநாயகர் கோவில் தெரு, முறப்பநாடு, 6) ராஜ்குமார் (26), த/பெ. துரைகிருஷ்ணன், மிலிட்டரி லைன் தெரு, பாளையங்கோட்டை, 7) மனோகரன் (36) த/பெ. சேகர், பிள்ளையார் கோவில்தெரு, மட்டக்கடை, தூத்துக்குடி ஆகிய 7 பேரையும் கைது செய்து ரூபாய். 1,10,00,000/- மதிப்பிலான 16 டன் முந்திரி பருப்பை ஏற்றி கொண்டு வந்த ரூபாய் 10,00,000/- மதிப்பிலான கடத்தப்பட்ட லாரியையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரையும் பறிமுதல் செய்தனர்.
 
இந்த வழக்கில்  ஞானராஜ் ஜெபசிங் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க புதுக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் ரமேஷ்க்கு மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்திரவிட்டார். காவல் ஆய்வாளரின் அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.

அதன் பேரில் ஞானராஜ் ஜெபசிங்யை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அதன் பேரில் புதுக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் ரமேஷ், ஞானராஜ் ஜெபசிங்கை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தார்.

 

Tags :

Share via