தமிழக கேரள எல்லையில் விடிய..விடிய போக்குவரத்து நெரிசல்.

by Editor / 17-12-2021 10:32:49am
தமிழக கேரள எல்லையில் விடிய..விடிய போக்குவரத்து நெரிசல்.

 தமிழக-கேரள எல்லையான தென்காசி மாவட்ட புளியரை வழியாக தினமும் கேரள மாநிலத்திற்கு பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான வாகனங்களில் அத்திவாசிய பொருட்கள் மட்டுமின்றி பல்வேறு பொருட்களை ஏற்றிச் சென்று வருகின்றது. இந்த நிலையில் தற்போது சபரிமலை ஸீஸன் காலமென்பதால் வாகனப் போக்குவரத்து அதிகரித்துள்ளது.மேலும் கடந்த மாதம் பெய்த பலத்த மழையின் காரணமாக கேரளா செல்லும் சாலைகள் புளியரை முதல் கோட்டைவாசல் வரை மலைவழிச்சாலை மிகவும் மோசமடைந்து பெரிய பள்ளங்கள் ஏற்பட்டு உள்ளன. 

திருமங்கலம்-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் செங்கோட்டை முதல் கோட்டை வாசல் வரை மோசமான சாலைகள் இருப்பதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசலும் வாகனங்கள் சேதம் அடையும் நிலையில் இருந்து வருகின்றது. இந்த நிலையில் நேற்று இரவு 12 மணி முதல் எஸ்.வளைவு பகுதியில் சாலையில் பெரிய பள்ளத்தில் வக்கணம் ஓன்று சிக்கிக்கொண்டதால்  தொடர்ந்து வாகன போக்குவரத்தை ஏற்பட்டு இன்று காலை வரை நீடித்தது மேலும் தற்பொழுது சபரிமலை சீசன் காலம் என்பதால் இரண்டு மடங்கு வாகனங்கள் அதிகரித்துள்ளன.தேசீய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கவனமெடுத்து சாலையை சீரமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தமிழக கேரள எல்லையில் விடிய..விடிய போக்குவரத்து நெரிசல்.
 

Tags :

Share via