கனிமொழி கருணாநிதி முயற்சியால் முதல் முறையாகத் தென் தமிழகத்தில் ஜூனியர் ஹாக்கி போட்டி

by 1tamilnews செய்திகள் / 19-12-2021 08:31:25pm
கனிமொழி கருணாநிதி முயற்சியால் முதல் முறையாகத் தென் தமிழகத்தில் ஜூனியர் ஹாக்கி போட்டி

தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதியின்  முயற்சியால் முதல் முறையாகத் தென் தமிழகத்தில் ஜூனியர் ஹாக்கி போட்டிகள் நடைபெறுகின்றன. தேசிய ஜூனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியின் ஒருங்கிணைப்புக் குழு தலைவராகக் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர்  கனிமொழி கருணாநிதி பொறுப்பேற்று, போட்டிகளைச் சிறப்புற நடத்தி வருகிறார்.

கலைஞர் கிரிக்கெட் காதலர் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். ஆனால், சிறு வயதில் அவருக்கு பிடித்தமான விளையாட்டாக இருந்தது ஹாக்கி. திருவாரூரில் போர்ட் ஸ்கூல் ஹாக்கி டீமிற்காக விளையாடி இருக்கிறார் கலைஞர். கலைஞரின் இலக்கியம், அரசியல், பேச்சாற்றல் என அனைத்தையும் பெற்றிருக்கும் அவரது மகள் கனிமொழிக்கும் ஹாக்கி மிகவும் பிடித்த விளையாட்டாக இருப்பது ஆச்சரியமில்லை. அந்த வகையில் தேசிய அளவில் நடைபெறும் ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டிகளுக்குத் தலைமையேற்று, தமிழகத்தின் ஹாக்கிப்பட்டி எனக் கூறப்படும் கோவில்பட்டியில் ஜூனியர் ஹாக்கி போட்டியை அவர் பிரமாண்டமாய் நடத்தி வருகிறார். 

தூத்துக்குடி மாவட்டம் - கோவில்பட்டியில் உள்ள செயற்கை புல் வெளி மைதானத்தில் 16ஆம் தேதி 11-வது தேசிய ஜூனியர் ஹாக்கி போட்டிகள் தொடங்கின, வரும் 25-ந்தேதி வரை நடைபெறுகிறது. இப்போட்டியில் 30 மாநில ஹாக்கி அணிகள் விளையாடுகிறார்கள். இந்திய அணியின் உலகக் கோப்பை பயிற்சி முகாமிற்குத் தேர்வு செய்யப்பட்ட கோவில்பட்டியைச் சேர்ந்த மாரீஸ்வரன் என்ற வீரரையும் அவர் குடும்பத்தாரையும் கனிமொழி எம்.பி கௌரவித்தார்.

 

Tags :

Share via