ஆலயத்திருவிழாவில் நகைத்திருட்டை தடுக்க பெண்களுக்கு ஊக்கு வழங்கி உஷார்படுத்திய தாழையூத்து காவல்துறையினர்.

by Editor / 19-12-2021 08:43:29pm
ஆலயத்திருவிழாவில் நகைத்திருட்டை தடுக்க பெண்களுக்கு ஊக்கு வழங்கி  உஷார்படுத்திய தாழையூத்து காவல்துறையினர்.

திருநெல்வேலி மாவட்டம், தாழையூத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராஜவல்லிபுரம் பகுதியில் உள்ள செப்பறை அழகிய கூத்தர் கோவிலில் இன்று காலை தேர்த்திருவிழா நடைபெற்றது.இந்த தேர் திருவிழாவில் மாவட்டத்தின் முக்கிய ஊர்களைச் சேர்ந்த பலர் வந்து சாமி தரிசனம் செய்யதிரண்டு வந்தனர்.

தேர்த் திருவிழாவில் மக்கள் கூட்டம் அதிகம் வரும் என்பதால் மக்கள் அணிந்துள்ள நகைககளின் பாதுகாப்பு வேண்டி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன் அறிவுறுத்தலின்படி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு காவல் துறையினர்  Safety pin(ஊக்கு) வழங்கியும், மர்ம நபர்கள் யாராவது சுற்றி திரிந்தால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் பாதுகாப்பு குறித்து அறிவுரை வழங்கினார்கள்.காவல்துறையினரின் இந்த முயற்சி மக்கள் மத்தியில் வரவேற்ப்பை பெற்றுள்ளது.

ஆலயத்திருவிழாவில் நகைத்திருட்டை தடுக்க பெண்களுக்கு ஊக்கு வழங்கி  உஷார்படுத்திய தாழையூத்து காவல்துறையினர்.
 
Tags :

Share via