அதிகாரிகள் நேரம் காலம் பார்க்காமல் உழைத்துக் கொண்டிருக்கின்றனர்.

by Admin / 31-12-2021 05:05:47pm
அதிகாரிகள் நேரம் காலம் பார்க்காமல்  உழைத்துக் கொண்டிருக்கின்றனர்.

நேற்று மட்டும் சென்னையின் பல்வேறு பகுதிகளில் 20 செ.மீட்டருக்கும் அதிகமான மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வுத் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த எதிர்பாராத கனமழை ஏற்படுத்தியுள்ள பாதிப்புகளைச் சரிசெய்ய ஒவ்வொரு அதிகாரியும் நேரம் காலம் பார்க்காமல் உழைத்துக் கொண்டிருக்கின்றனர்.

வானிலைக் கணிப்புகளையும் மீறிக் கொட்டித் தீர்க்கிறது மழை. எதிர்பாராத மாமழையால் பல இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளதோடு, கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.

 

பொதுமக்களும் கவனமுடன் தங்கள் பயணத்தை அமைத்துக் கொள்வதோடு, மழைக்கால வழிகாட்டுதல்களைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

அதிகாரிகள் நேரம் காலம் பார்க்காமல்  உழைத்துக் கொண்டிருக்கின்றனர்.
 

Tags :

Share via

More stories

Logo