13 கோடிக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார் வாங்கிய முகேஷ் அம்பானி

by Admin / 05-02-2022 11:11:19am
13 கோடிக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார் வாங்கிய முகேஷ் அம்பானி

உலகின் மிகப்பெரும் பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானிக்கு கார்கள் மீது கொள்ளை பிரியம். இவரது ஜியோ கார் கேரேஜில் உலகில் உள்ள பிரபலமான பல கார்கள் அணிவகுத்து நிற்கின்றன. 

இந்தநிலையில் முகேஷ் அம்பானி ரோல்ஸ் ராய்ஸ் காட்ஜ்பேக் காரை வாங்கி உள்ளார். இந்த காரின் விலை ரூ.13 கோடியே 14 லட்சம் என போக்குவரத்து அதிகாரிகள் கூறியுள்ளனர்.
 
மேலும் இது இந்தியாவில் வாங்கப்பட்ட விலை அதிகமான கார் என கூறியுள்ளனர். பெட்ரோலில் இயங்கும் ரோல்ஸ் ராய்ஸ் கார் கடந்த 31-ந் தேதி மும்பை தார்டுதேவ் வட்டாரப்போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

2018-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட போது இந்த காரின் அடிப்படை மாடல் விலை ரூ.6 கோடியே 95 லட்சமாக இருந்தது. மேலும் காரில் செய்யப்படும் வசதிகள், மாற்றங்களுக்கு அதிக செலவாகும் எனவும் வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

12 சிலிண்டர்கள் கொண்ட இந்த கார் 2.5 டன் எடை கொண்டது. 564 பி.எச்.பி. திறன் கொண்டது. இதேபோல காருக்கு ரூ.12 லட்சம் கொடுத்து ‘0001' என்ற வி.ஐ.பி. எண்ணும் வாங்கப்பட்டுள்ளது. இதேபோல காருக்கு ரூ.20 லட்சம் வரி, ரூ.40 ஆயிரம் சாலை வரியும் செலுத்தப்பட்டுள்ளது.
 

 

Tags :

Share via