சரோஜினி நாயுடு பிறந்த நாள் : 13.02.2022

by Editor / 13-02-2022 09:40:14am
சரோஜினி நாயுடு பிறந்த நாள் : 13.02.2022

இந்தியாவின் 'கவிக்குயில்' என்று அழைக்கப்பட்ட சுதந்திரப் போராட்ட வீராங்கனை சரோஜினி நாயுடு 1879-ஆம் ஆண்டு பிப்ரவரி 13-ஆம் தேதி தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பிறந்தார்.

 இவருக்கு சிறு வயதில் இருந்தே கவிதை எழுதுவதில் நாட்டம் அதிகம்.இவரது படைப்புகளால் கவரப்பட்ட ஹைதராபாத் நிஜாம்,வெளிநாடு சென்று படிக்க உதவித்தொகை வழங்கினார்.

 இவர் எழுதிய The Golden Threshold,The Bird of Time,The Broken Wing ஆகிய புத்தகங்கள் குறிப்பிடத்தக்கவை. 1905-ஆம் ஆண்டு வங்கப் பிரிவினையின் போது இந்திய தேசிய சுதந்திர இயக்கத்தில் இணைந்தார்.

 1925-ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். காந்திஜி இவரை செல்லமாக 'மிக்கி மவுஸ்' என்பார்.நாடு சுதந்திரம் பெற்ற பிறகு,இவர் உத்தரப்பிரதேச ஆளுநராக நியமிக்கப்பட்டார். மேலும்,முதல் பெண் ஆளுநர் என்ற பெருமையையும் பெற்றார்.

 பெண்களுக்கு பெருமை சேர்த்த சரோஜினி நாயுடு 70-வது வயதில்(1949) மறைந்தார்.20-ம் நூற்றாண்டின் இணையற்ற பெண்மணிகளில் ஒருவராக திகழ்ந்த இவரது பிறந்தநாள் இந்தியாவில் மகளிர் தினமாக கொண்டாடப்படுகிறது.

 

Tags :

Share via