ஆட்சியர்பெயரில் போலி முகநூல் கணக்கு உருவாக்கி பண மோசடியில் ஈடுபட முயன்ற நபர் கைது.

by Editor / 07-03-2022 11:36:29pm
ஆட்சியர்பெயரில்  போலி முகநூல் கணக்கு உருவாக்கி பண மோசடியில் ஈடுபட முயன்ற நபர் கைது.

செங்கல்பட்டு மாவட்டம் சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத்  தன்னுடைய Facebook- ல் உள்ள புகைப்படத்தை எடுத்து யாரோ மர்ம நபர் Facebookல் போலியான கணக்கு உருவாக்கி தன்னுடைய நண்பர்களிடம் பணம் கேட்டது சம்மந்தமாக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில்,

 செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன்  உத்தரவின்படி இணையவெளி குற்ற பிரிவு   காவல் ஆய்வாளர் சிவக்குமார் தலைமையில்  காவல் உதவி ஆய்வாளர்தனசேகரன், தலைமை காவலர்கள் டேனியல், சுதாகர், குருநாதன், சங்கர். சிவா, காவலர்கள் கலைவாணன்,  தேவநாதன், மெகபூப், முரளி,லெனின் மற்றும் பாரத் ஆகியோர்கள் அடங்கிய காவல் துறைதனிப்படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.இந்த  வழக்கில் சம்மந்தப்பட்ட நபர்கள்  ராஜஸ்தான் மாநிலம். பரத்பூர் மாவட்டத்தில் பதுங்கியிருப்பது தெரிய வந்ததால்,தனிப்படை போலிசார் ராஜஸ்தான் மாநிலம், பரத்பூர் மாவட்டம் சென்று விசாரணை மேற்கொண்டதில் இக்குற்றத்தை செய்தவர் அசாருதின் என தெரியவந்ததால் அவரை மேற்படி குற்றத்திற்காக கைது செய்து அங்குள்ள பரத்பூர் மாவட்ட இளங்சிறார் நீதி குழுமத்தில் ஆஜர்படுத்தி அவர்களின் உத்திரவுபடி,செங்கல்பட்டு மாவட்ட இளங்சிறார் நீதி குழுமத்தில் ஆஜர்படுத்தி செங்கல்பட்டு கூர்நோக்கு இல்ல பாதுகாப்பில் அனுப்பப்பட்டது..

பொதுமக்கள் மற்றும் பெண்கள் தன்னுடைய தனிப்பட்ட விவரங்கள் மற்றும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட வேண்டாம். இதுபோல் எவரேனும் Facebook Messenger App மூலம் தங்களது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பெயரில் Google Pay, Phonepe, PayTM அல்லது வேறு ஏதேனும் UPI ID மூலம் மிகவும் அவசரம் என்று கூறி பணம் கேட்டால் பணத்தை அனுப்ப வேண்டாம் என்று செங்கல்பட்டு மாவட்ட காவல் துறை சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.

 சைபர் கிரைம் பற்றிய புகார்களுக்கு www.cybercrime.gov.in என்ற வளைதளத்தில் தங்கள் புகார்களை பதிவிடவும். சைபர் குற்றவாளிகள் மூலம் ஏற்பட்ட நிதியிழப்புகருக்கு 1930 என்ற எண்ணை உடனடியாக தொடர்பு கொள்ளவும்.

 

Tags : The person who tried to create a fake Facebook account in the name of the collector and engage in money laundering has been arrested.

Share via