61 மருத்துவமனைகள் அழிந்தன உக்ரைன் மந்திரி

by Admin / 09-03-2022 12:06:07pm
61 மருத்துவமனைகள் அழிந்தன உக்ரைன் மந்திரி

உக்ரைன் மீது ரஷியா போர் தொடங்கி இன்றுடன் 14 நாட்கள் ஆகிறது. இரு நாடுகளை சேர்ந்த பொதுமக்கள், வீரர்கள் என பலர் உயிரிழந்து உள்ளனர். போரை நிறுத்தும்படி அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

ரஷியாவின் தாக்குதலுக்கு உக்ரைனும் பதிலடி கொடுத்து வருகிறது. இருதரப்பிலும் பாதுகாப்பு படையினர், பொதுமக்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். 
 
இந்நிலையில், ரஷிய ராணுவம் நடத்திய தாக்குதலில் இதுவரை 61 மருத்துவமனைகள் கடுமையாக சேதமடைந்துள்ளன என உக்ரைன் சுகாதாரத்துறை மந்திரி விக்டர் லியாஷ்கோ தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பேசிய அவர், ரஷிய படையெடுப்பாளர்கள் ஜெனீவா உடன்படிக்கையை மீறுகிறார்கள். அவர்களால் ஜெனீவா ஒப்பந்தத்தை மீறுவது மற்றும் மனிதாபிமான பாதைகளை அனுமதிக்காதது குறித்து உக்ரைன் உலக சுகாதார நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளது என்றார்.

 

Tags :

Share via