தென்காசி மாவட்ட ஊராட்சி குழு கூட்டத்தில் 1.5கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளதாக மாவட்ட ஊராட்சி தலைவிமீது  குற்ற சாட்டு

by Editor / 11-03-2022 06:38:14pm
தென்காசி மாவட்ட ஊராட்சி குழு கூட்டத்தில் 1.5கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளதாக மாவட்ட ஊராட்சி தலைவிமீது  குற்ற சாட்டு


தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 3 வது மாவட்ட ஊராட்சி குழு கூட்டம் இன்று மாவட்ட ஊராட்சி தலைவி தமிழ்செல்வி தலைமையில் நடைபெற்றது. 
இக்கூட்டத்தில் மாவட்ட ஊராட்சி தலைவர் உறுப்பினர்களுக்கு தெரியாமல் தீர்மானம் நிறைவேற்றி நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறி திமுக உறுப்பினர்கள் சிலர் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். மேலும் தீர்மானத்தை ரத்து செய்யக்கோரி வாக்கு வாதம் எழுந்த நிலையில் இதனை மறுத்த மாவட்ட ஊராட்சி தலைவர் கூட்டம் நிறைவடைந்ததாக கூறி பாதியில் கூட்டத்தை விட்டு வெளியேறினார்.
இது கூறித்து மாவட்ட கவுன்சிலர் கனிமொழி கூறுகையில்,கடந்த ஜனவரி மாதம் 12ம் தேதி மாவட்ட ஊராட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் உறுப்பினர்களிடம் ஏழு மன்ற பொருளை வைத்து ஒப்புதல் 
பெறப்பட்ட நிலையில் உறுப்பினர்கள் தலையீடு இல்லாமல் தீர்மானங்கள்  13ஆக மாற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநில அரசின் நிதி ஒதுக்கீட்டில் தலைவி தன்னிச்சையாக  சுமார் 1.5 கோடி மோசடி செய்துள்ளார்.எனவே அந்த தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும் இல்லாதபட்சத்தில் அவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரவதோடு திமுக தலைவரும் தமிழக முதல்வருமான ஸ்டாலினை சந்தித்து முறையிட உள்ளதாகவும் தெரிவித்தார். தென்காசி மாவட்ட ஊராட்சியை பொருத்தவரை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி மட்டுமே வெற்றி பெற்று உள்ள நிலையில்  நிதி முறைகேடு நடந்ததாக திமுக உறுப்பினர்களே திமுக மாவட்ட குழுத்தலைவியை ஊழல் செய்துள்ளதாக குற்றம் சாட்டியது, வாக்குவாதத்தில் ஈடுபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,ஒரு சில திமுக உறுப்பினர்கள் மட்டுமே வாக்கு வாதத்தில் ஈடுபட்டது குறிப்பிடதக்கது.

 

Tags : Tenkasi district panchayat leader accused of embezzling 1.5 crore rupees

Share via