போரினால் துவண்டு போயுள்ள உக்ரேன் குழந்தைகளுடன் விளையாடி மகிழ்ச்சி படுத்திய சூப்பர் ஹீரோக்கள்

by Staff / 27-03-2022 02:15:45pm
போரினால் துவண்டு போயுள்ள உக்ரேன் குழந்தைகளுடன் விளையாடி மகிழ்ச்சி படுத்திய சூப்பர் ஹீரோக்கள்

போரினால் துவண்டு போயுள்ள உக்ரேனிய குழந்தைகளுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக ஆங்கிலத் திரைப் படத்தில் வரும் பிரபல கதாபாத்திரங்களின் உடைகளை அணிந்து வந்து இளைஞர்கள் சில குழந்தைகளுடன் விளையாடி உற்சாகப்படுத்தினர்.

கீவ் கார்கீவ்  நகர் சுற்றிவளைத்த ரஷ்ய படைகள் தொடர்ந்து ஏவுகணை மற்றும் பீரங்கித் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

ஆங்காங்கே குண்டுகள் வீசப்படுவது சுரங்கப் பாதைகளும் பாதுகாக்கும் குழிகளிலும் மக்கள் தஞ்சம் அடைந்துள்ளனர்.

இந்தநிலையில் கார்கிவ் வில்  உள்ள மெட்ரோ சுரங்கத்தில் தஞ்சமடைந்திருந்த குழந்தைகளுடன் விளையாடி இளைஞர்கள் மகிழ்ச்சிபடுத்தினர்.

 

Tags :

Share via