ஜெர்மனி சென்றார் பிரதமர் நரேந்திர மோடி

by Staff / 02-05-2022 01:44:41pm
 ஜெர்மனி சென்றார் பிரதமர் நரேந்திர மோடி

ஐரோப்பிய பயணத்தின் முதல் கட்டமாக ஜெர்மனியின் பெர்லின் நகருக்கு சென்றடைந்தார் விமான நிலையத்தில் அவருக்கு துப்பாக்கி ஏந்திய வீரர்கள் அணிவகுப்புடன் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது .பிரதமர் நரேந்திர மோடி ஜெர்மனி டென்மார்க் பிரான்ஸ் ஆகிய மூன்று நாடுகளும் 3 நாள் சுற்றுப் பயணமாக சென்றுள்ள தனி விமானத்தில் புறப்பட்டு சென்றார். பிரதமர் மோடி பயணத்தின் முதல் கட்டமாக ஜெர்மனியின் பெர்லின் விமான நிலையத்திற்கு சென்றடைந்தார். அங்கு அவருக்கு துப்பாக்கி ஏந்திய வீரர்களின் அணிவகுப்புடன் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜெர்மன் பிரதமர் ஓசை சந்தித்து இருநாட்டு உறவுகளையும் ஒத்துழைப்பையும் வழிப்படுத்தும் பற்றி பிரதமர் மோடி பேச உள்ளார். இரு நாட்டு பிரதமர்கள் . தலைமையில் இந்திய ஜெர்மனி அரசுகள் இடையே  பேச்சுக்களும் நடைபெற உள்ளது. மேலும் மூன்று நான்கு ஆகிய நாட்களில் டென்மார்க்கின் கோபன்ஹேகனில் அந்நாட்டு பிரதமர்   பிரதமர் மோடி சந்தித்து பேச உள்ளார். இந்திய நாடுகளின் மாநாட்டில் ஐஸ்லாந்து நார்வே ஸ்வீடன் பின்லாந்து நாடுகளின் தலைவர்களையும் சந்தித்து பேசுகிறார். பிந்தைய பொருளாதார மீட்சி பருவநிலை மாற்றம் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உலகின் பாதுகாப்பு நிலவரம் ஆகியன குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது. நாடு திரும்பும் வழியில் மே 4 அன்று பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் அந்நாட்டு அதிபர் இமானுவேல் சேகரனை சந்தித்து பேசவுள்ளார். மூன்று நாடுகளிலும் மேற்கொள்ளும் பயணத்தில் 77 நாடுகளை சேர்ந்த எட்டு தலைவர்களுடன் இரு தரப்பு மற்றும் பல தரப்பு பேசிய பிரதமர் மோடி பங்கேற்கிறார் .

 

Tags :

Share via