கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதன் எதிரொலி பொது போக்குவரத்து முடக்கம்

by Staff / 04-05-2022 03:16:25pm
கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதன் எதிரொலி பொது போக்குவரத்து முடக்கம்

சீனாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அந்நாட்டின் தலைநகர் பீஜிங்கில் பொது போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.சீனாவில் கொரோனா அதிகரித்த ஹாங்காங் நகரில் ஒரு மாதத்திற்கும் மேலாக முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில் தற்போது ஓரளவு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இதற்கிடையில் தலைநகர் பீஜிங்கில் அதிகரித்தால் அங்கு பள்ளிகள் வணிக வளாகங்கள் அனைத்தும் மூடப்பட்டன. இந்த நிலையில் ஹாங்காங் போன்ற முழு ஊரடங்கு தவிர்க்கும் விதமாக பொது போக்குவரத்து பெய்ஜிங்கில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் பெய்ஜிங்கில் 40க்கும் மேற்பட்ட மெட்ரோ நிலையங்களும் சுமார் 150க்கும் மேற்பட்ட பேருந்து வழித்தடங்கள் மூடப்பட்டுள்ளன.

 

Tags :

Share via