தேன்கனிக்கோட்டையில் ரியல் எஸ்டேட் அதிபர் சுட்டுக்கொலை!

by Editor / 24-05-2021 04:28:55pm
தேன்கனிக்கோட்டையில் ரியல் எஸ்டேட் அதிபர் சுட்டுக்கொலை!



கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் ரியல் எஸ்டேட் அதிபர் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையை அடுத்த தளி அருகே உள்ள பெல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் லோகேஷ் (வயது 30). ரியல் எஸ்டேட் அதிபர். இவருக்கு ஜெயந்தி என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.இந்தநிலையில் லோகேஷ் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவில் ஒரு காரில் வந்த 4 பேர், லோகேசை எழுப்பினர். நிலம் விற்பனை தொடர்பாக பேச வேண்டும் என்று கூறினர்.
இதனால் லோகேஷ், தூக்க கலக்கத்தில் இருந்து வீட்டைவிட்டு வெளியே வந்தார். அப்போது கைத்துப்பாக்கியால் லோகேசை சுட்டனர். அதில் மார்பில் குண்டு பாய்ந்து அவர் நிலைகுறைந்து கீழே விழுந்தார்.அந்த கும்பல் காரிலேயே தப்பி ஓடிவிட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த போலீஸ் டி.எஸ்.பி. சங்கீதா, தளி இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து லோகேஷ் உடலை கைப்பற்றி, கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories

Logo