2 மண்ணுளி பாம்புகளை கடத்தி ரூ.10 லட்சத்திற்கு விற்க முயற்சி- 5 பேர் கைது

by Staff / 30-05-2022 05:15:12pm
 2 மண்ணுளி பாம்புகளை கடத்தி ரூ.10 லட்சத்திற்கு விற்க முயற்சி- 5 பேர்  கைது

கேரள மாநிலம் கோழிக்கோடு வனத்துறை விஜிலன்ஸ் (டி.எப்.ஓ) அதிகாரியான சுனில் குமாருக்கு, ஒரு கும்பல் 2 தலையுள்ள பாம்பினை கடத்தி வந்து கேரளாவில் ஒரு வீட்டில் விற்பனைக்கு வைத்திருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் போலீசார் அந்த வீட்டிற்கு சென்று அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வீட்டில் 5 பேர் கும்பல் இருந்தனர். வனத்துறையினர் வருவதை பார்த்ததும் அவர்கள் அங்கிருந்து தப்பியோட முயற்சித்தனர். உடனடியாக வனத்துறையினர் விரைந்து அவர்களை மடக்கி பிடித்தனர்.மேலும் அந்த வீட்டிலும் சோதனை மேற்கொண்டனர். அப்போது வீட்டிற்குள் 2 தலைகள் கொண்டதுபோல் காணப்படும் மண்ணுள்ளி பாம்புகள் இரண்டு இருந்ததை கண்டுபிடித்தனர். பின்னர் அவற்றை மீட்டனர்.
 
தொடர்ந்து அங்கிருந்தவர்களிடம் விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் திருப்பூரை சேர்ந்தவர் ராஜாமுகமது(39). மலப்புரம் எலங்கூர் பகுதியை சேர்ந்தவர் அப்துல் கரீம்(42) எடவன்னம் பகுதியை சேர்ந்தவர் கமருதீன்(40) காசர்கோட்டை சேர்ந்தவர் அனிபா முகமது(46). ஆலப்புழா சேர்த்தலாவை சேர்ந்தவர் ஆனந்தன்(28) என்பது தெரியவந்தது.

இவர்கள் 5 பேரும் திருப்பூரிலிருந்து 2 லட்சம் ரூபாயை கொடுத்து 2 தலையுள்ள பாம்புகளை வாங்கி வந்து கேரளாவில் உள்ள ஒருவருக்கு ரூ.10 லட்சத்திற்கு விற்க திட்டமிட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.இதையடுத்து போலீசார் அவர்கள் 5 பேரையும் கைது செய்தனர். மேலும் பாம்பை வாங்குவதாக கூறிய நபரிடமும் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

 

Tags :

Share via