மாநிலங்களுக்கு  11 லட்சம் டோஸ்  தடுப்பூசி அனுப்பி வைக்கப்படும்   மத்திய அரசு அறிவிப்பு 

by Editor / 27-05-2021 04:10:32pm
மாநிலங்களுக்கு  11 லட்சம் டோஸ்  தடுப்பூசி அனுப்பி வைக்கப்படும்   மத்திய அரசு அறிவிப்பு 


 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளிடம் 1.84 கோடி டோஸ் கோவிட் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ள நிலையில், அடுத்த 3 நாட்களில் 11 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்பட உள்ளதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது.
தேசிய அளவிலான தடுப்பூசி திட்டத்தின் கீழ், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு கொரோனா தடுப்பூசியை மத்திய அரசு இலவசமாக வழங்கி வருகிறது. மேலும், நேரடியாக கொள்முதல் செய்தும் விநியோகம் செய்து வருகிறது. தற்போது வரை, இலவசமாகவும், மாநில கொள்முதல் திட்டத்தின் அடிப்படையிலும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு 22,16,11,940 டோஸ்கள் தடுப்பூசி வழங்கப்பட்டு உள்ளது.இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: தற்போது மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளிடம் 1,84,90,522 டோஸ் கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது. மேலும் கூடுதலாக, 11,42,630 டோஸ் தடுப்பூசிகள், அடுத்த 3 நாட்களில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

 

Tags :

Share via