வீட்டு குடிநீர் இணைப்புக்காக லஞ்சம் 2ஆண்டு மெய்க்காவல் சிறை தண்டனை

by Editor / 05-07-2022 05:40:00pm
வீட்டு குடிநீர் இணைப்புக்காக லஞ்சம்  2ஆண்டு மெய்க்காவல் சிறை தண்டனை

தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா  2012 வருடம் பொட்டிபுரம் கிராமத்தைச் சேர்ந்த ராஜன் மகன் செல்வராஜ் 43 என்பவர் வீட்டு குடிநீர் இணைப்புக்காக 19, 10.12 அன்று பொட்டிபுரம் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு சென்று மனு கொடுத்து மனுவை பெற்றுக் கொண்ட ஊராட்சி மன்ற தலைவி சந்திரா என்பவர் 3000 ரூபாய் லஞ்சம் பணம் தர வேண்டும் என  கேட்டுள்ளார் மன உளைச்சலுக்கு ஆளான செல்வராஜ் லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினிடம் அணுகிய போது ரசாயனம் தடவியே 3000 ரூபாய் நோட்டுகளை செல்வராஜ் இடம் கொடுத்து ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வைத்து ஊராட்சி மன்ற தலைவி சந்திரா இடம் கொடுக்கும் பொழுது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர் கையும் களவுமாக பிடித்து கைது செய்து வழக்கு பதிவு செய்தனர் இது தொடர்பாக தேனி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்த நிலையில் இன்று இறுதி விசாரணையில் நீதிபதி திரு கோபிநாதன் எதிரியை குற்றவாளி என தீர்மானித்து குற்றவாளிக்கு  இரண்டு ஆண்டு மெய்க்காவல் சிறை தண்டனையும் 2000 ரூபாய் அபராதம் விதித்தும் அபராத தொகை கட்ட தவறினால் ஒரு மாதம் மெய்க்காவல் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார்
 

 

Tags :

Share via