வால்பாறை அருகே கோவில் மற்றும்  இரண்டு வீடுகளை காட்டு யானை இடித்து சேதம் மக்கள் அச்சம்.

by Editor / 23-08-2022 10:01:47pm
வால்பாறை அருகே கோவில் மற்றும்  இரண்டு வீடுகளை காட்டு யானை இடித்து சேதம் மக்கள் அச்சம்.

   
கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார  எஸ்டேட்  பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது காட்டு யானைகள் வனப்பகுதியில்  இருந்து வெளியேறி உணவு தேடி குடியிருப்பு பகுதியில் உள்ள வீடுகள் சத்துணவு மையங்கள் மளிகை கடைகள் போன்றவற்றை இடித்து சேதப்படுத்தி வருகிறது. வனத்துறையினர் யானைகள் விரட்டும் பணிகள் ஈடுபட்டு வந்தனர். நேற்று இரவு ஊசிமலை டாப் எஸ்டேட்  பகுதியில் குடியிருப்புக்குள் நுழைந்த நான்கு காட்டு யானைகள் அப்பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் ஜன்னல் கதவு உடைத்து கோவிலுக்குள் இருந்த பொருட்களை உடைத்து சேதப்படுத்தியது அங்கிருந்து காட்டு யானைகள் அருகில் இருந்த கிருஷ்ணன் மாரிமுத்து ஆகிய அவர்களின் வீடுகளையும் ஜன்னல் கதவுகளை இடித்து சேதப்படுத்தியது தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் நான்கு காட்டு யானைகளையும் பகுதியிலிருந்து விர்ட்டினர்  யானைகள் 2 நாளாக அப்பகுதியில் முகாமிட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். அதை போல் சோலையாறு அணை பகுதியில் உள்ள சுகாதார மருத்துவமனை வளாகத்தில் ஒற்றைக் காட்டு யானை நுழைந்து செல்வதை அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதுபோன்று காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து வருவதால் வனத்துறையினர் யானைகளை அடர்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வால்பாறை அருகே கோவில் மற்றும்  இரண்டு வீடுகளை காட்டு யானை இடித்து சேதம் மக்கள் அச்சம்.
 

Tags :

Share via