முதல்வர் ஸ்டாலின் ஆட்சி  அம்மா அரசு போல இருக்கு முன்னாள் அமைச் ச ர்  - ஆர்.பி உதயகுமார் பாராட்டு

by Editor / 08-06-2021 05:51:56pm
முதல்வர் ஸ்டாலின் ஆட்சி  அம்மா அரசு போல இருக்கு முன்னாள் அமைச் ச ர்  - ஆர்.பி உதயகுமார் பாராட்டு

 

தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான மற்றும் மக்களுக்கு பயன்படும் வகையில் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 
அதுமட்டுமல்லாமல்கொரோனா பேரிடரை தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன்படி தமிழகத்திலேயே தடுப்புசி உற்பத்திக்கு மாத்தி கொடுக்க மத்திய அரசை வலியுறுத்தினார். பாதிப்பு அதிகமுள்ள இடங்களுக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்தது மட்டுமல்லாமல் கொரோனா வார்டுக்கு கவச உடை அணிந்து நோயாளிகளை சந்தித்தார். இவ்வாறு திமுக அரசின் ஆட்சி எதிர்க்கட்சிகள் கூட பாராட்டும் வகையில் சிறப்பாக பணியாற்றி வருகிறது.
இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் முதல்வர் ஸ்டாலின் ஆட்சி அம்மா ஆட்சி போல் உள்ளது என்று தெரிவித்துள்ளார். கொரோனாவை கட்டுப்படுத்துவதில் மக்கள் ஒத்துழைப்பும், தமிழக அரசு எடுத்திருக்கும் நடவடிக்கைகளும் மகிழ்ச்சியும் நம்பிக்கையும் அளிக்கிறது. புதிய ஆட்சிக்கு எடுத்தவுடனே பெரிய சவால் கொரோனா. அவற்றை சிறப்பாக கையாள்வது பாராட்டத்தக்கது என்று கூறியுள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo