தலை சிறந்த கல்லூரிகளை தமிழகம் பெற்றுள்ளது-முதலமைச்சர் ஸ்டாலின்.

by Editor / 26-08-2022 08:53:12pm
தலை சிறந்த கல்லூரிகளை தமிழகம் பெற்றுள்ளது-முதலமைச்சர் ஸ்டாலின்.

கோவை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்துள்ள, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்,கோவை அவிநாசி சாலையில் உள்ள பி.எஸ்.ஜி.கலை அறிவியல் கல்லூரியின் பவள விழாவில் கலந்து கொண்டுள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசியதாவது:இந்த நிகழ்ச்சியை தனியார் நிகழ்ச்சியாக பார்க்கவில்லை. எல்லோருக்குமான நிகழ்ச்சியாக தான் பார்க்கிறேன். பொதுமக்களின் சேவைக்காக திகழ்ந்தவர் கோவிந்தசாமி அவர்கள்.மாணவச் செல்வங்களின் அறிவைக் பெருக்கும் வகையில் இந்த பி.எஸ்.ஜி கல்லூரி செயல்படுகிறது. பி.எஸ்.ஜி என்பதற்கான பொருள்.. P – people S – service G – good.

பி.எஸ்.ஜி  கல்லூரி தரவரிசையில் மிக முக்கியமான இடத்தில் உள்ளது. இடஒதுக்கீடு அடிப்படையில் மணவர் சேர்க்கையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது இந்த கல்லூரி. பிளாஸ்டிக் ஒழிப்பு, சுய தொழில் வேலை வாய்ப்புக்கு வழிவகுத்தல், பல்வேறு நாட்டு நலத்திட்ட பணிகளை இந்த அரசு செவ்வனே செய்து வருகிறது.
75 ஆம் ஆண்டு பவள விழாவைக் கொண்டாடும் வகையில் 75,000 பானைகளை செய்து கின்னஸ் சாதனை செய்துள்ள இந்த கல்லூரி, மண்பாண்டம் தொழில் செய்யும் தொழிலாளர்களின் வாழ்வைக் சிறக்க செய்துள்ளது.தலை சிறந்த கல்லூரிகளை தமிழகம் பெற்றுள்ளது. கல்வியில் சிறந்த மாநிலமாக தமிழகம் விளங்கி வருகிறது. இந்த வளர்ச்சியைக் இந்தியாவே திரும்பி பார்க்கிறது.பள்ளி கல்வி துறையாக இருந்தாலும், உயர்கல்வியாக இருந்தாலும் பல்வேறு திட்டங்களை இந்த அரசு செயல்படுத்தி வருகிறது என்றார் முதலமைச்சர் ஸ்டாலின்.
 

தலை சிறந்த கல்லூரிகளை தமிழகம் பெற்றுள்ளது-முதலமைச்சர் ஸ்டாலின்.
 

Tags :

Share via