கடன் செயலிகளுக்கு வந்தது ஆப்பு

by Admin / 10-09-2022 11:32:34am
கடன் செயலிகளுக்கு வந்தது ஆப்பு


லோன் ஆப்புகள்  மூலம் கடன்  வழங்கும்  வெளிநாட்டு நிறுவனங்கள் அதிகரித்து விட்டன .இதனால்,லோன் பெற்றோர் சரியான  நேரங்களில் கடன்தொகை கட்டாமலிருந்தால்,அவர்களது  புகைப்படம்   மாப்பிங் செய்யப்பட்டு ,ஆபாசமாக சித்தரிக்கப்பட்ட   படங்கள்  நண்பர்கள் ,உறவினர்களுக்கு அனுப்பி அவமானப்படுத்தும் போக்கு அதிகரித்து விட்டன.இதனால்,பல இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்ளும் போக்குத்தொடர்கின்றன.கண்ணுக்குத்தெரியாத இந்த நிதி நிறுவனங்களைக் கட்டுப்படுத்த வேண்டிய  அவசியம் மத்திய அரசுக்கு ஏற்பட்டது நாட்டினுடைய பாதுகாப்புக் கருதி தனிநபர் தகவல்களைச்சேகரித்து இயங்கும் சீன வெளிநாட்டு ஆப்புகளின் வழி கடன் வழஙிகும் புற்றீசல் போல  கூகுள்பிளே ஸ்டோர்,ஆப்பிள் ஸ்டோரிலுள்ள  செயலிகளை  அகற்ற  மத்திய  அரசு முடிவு செய்து ,அதற்கான ஒரு குழுவை அமைத்துள்ளது.இனி மத்திய ரிசர்வ் வங்கியின் அனுமதியின்றி இயங்கும் ஆப்புகளை அகற்றும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியுள்ளது.

 

Tags :

Share via