முன்னாள் முதல்வர் இபிஎஸ் மீது நடவடிக்கை எடுக்க தடை இல்லை

by Staff / 14-09-2022 05:01:48pm
 முன்னாள் முதல்வர்  இபிஎஸ் மீது நடவடிக்கை எடுக்க தடை இல்லை

கடந்த 2016-21ம் ஆண்டுகளில், அதிமுக ஆட்சியில் தஞ்சாவூர், சிவகங்கை, கோவை மாவட்டங்களின் நெடுஞ்சாலை டெண்டர் ஒதுக்கீட்டில், அரசுக்கு 692 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தி முறைகேடு செய்ததாக முன்னாள் முதல்வர் இபிஎஸ்க்கு எதிராக புகார் அளிக்கப்பட்டு இருந்தது. அறப்போர் இயக்கத்தின் இந்த புகார் தனக்கு அவப்பெயரை ஏற்படுத்தியதாக கூறி, மான நஷ்ட ஈடாக ஒரு கோடியே 10 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கும்படி இபிஎஸ் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டிருந்த நிலையில் அதுவரை விஜிலென்ஸ் கமிஷனர் நடவடிக்கை எடுக்க தடை விதிக்க வேண்டும் என்று இபிஎஸ் தரப்பு கோரிக்கை வைத்தது. இந்நிலையில் இந்த கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது. இதன் மூலம் இபிஎஸ் மீது நடவடிக்கை எடுக்க தடை இல்லை.

 

Tags :

Share via