சிற்றுண்டி வழங்கும் திட்டம் கனிமொழி கருணாநிதி கொடி அசைத்துத் துவக்கி வைத்தார்.

by Editor / 16-09-2022 09:45:52am
சிற்றுண்டி வழங்கும் திட்டம்  கனிமொழி கருணாநிதி கொடி அசைத்துத் துவக்கி வைத்தார்.

தமிழகத்தில் உள்ள அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் படிப்பை ஊக்குவிக்கவும், ஊட்டச்சத்துக் குறைபாட்டை போக்கவும், கற்றால் இடைநிற்றலைத் தவிர்க்கவும் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலான அரசு தொடக்கப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அனைத்து வேலை நாட்களிலும் சத்தான சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.

இதன் தொடர்ச்சியாக இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசுப்பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலான படிக்கும் மாணவர்களுக்கு, சிற்றுண்டி வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. மாநகராட்சி லூர்தம்மாள்புரம் சமையல் கூடத்தில், காலைச் சிற்றுண்டி வழங்கும் திட்டத்தைக் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி கொடி அசைத்துத் துவக்கி வைத்தார்.
 
இந்த நிகழ்ச்சியில், சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ ஆகியோர் உடனிருந்தனர்

 

Tags :

Share via