இந்தியாவின் முதல் சூரிய மின்னாற்றல் கிராமம் மோடி அறிவிப்பு

by Staff / 10-10-2022 01:00:41pm
இந்தியாவின்  முதல் சூரிய மின்னாற்றல் கிராமம் மோடி அறிவிப்பு

குஜராத்தின் மெஹ்சானா மாவட்டத்தில் உள்ள மோதேரா கிராமத்தை, இந்தியாவின் முதல் சூரிய சக்தி கிராமமாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று அறிவித்தார். மோதேரா கிராமத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் சோலார் பேனல்கள் பொருத்தப்பட்டு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதன் மூலம் மோதேரா 24 மணி நேரமும் சூரிய சக்தி மின்சாரம் பெறும் கிராமம் என்ற பெருமையை பெற்றுள்ளது. இந்த கிராமத்தில் பிரபலமான சூரியன் கோயில் உள்ளது. இது 1026-27 காலகட்டத்தில் சாலுக்கிய வம்சத்தின் மன்னர் பீமன் என்பவரால் கட்டப்பட்டது.

 

Tags :

Share via