ஆப்கானிஸ்தானுக்கு 45 டன் மருத்துவ பொருட்கள் அனுப்பி இந்தியா.

by Staff / 11-10-2022 04:18:35pm
ஆப்கானிஸ்தானுக்கு 45 டன் மருத்துவ பொருட்கள் அனுப்பி இந்தியா.

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், அங்கு கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு உணவு தட்டுப்பாடு, வாழ்வாதாரம் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை அந்நாட்டு மக்கள் சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்தியா இதுவரை 13 கட்டமாக 45 டன் மருத்துவ உதவிகளை ஆப்கானிஸ்தானுக்கு வழங்கியுள்ளது. அதில் அத்தியாவசிய உயிர்காக்கும் மருந்துகள், காசநோய் எதிர்ப்பு மருந்துகள், 5,00,000 அளவு கொரோனா தடுப்பூசிகள் என பல மருந்துகள் அடங்கும். அத்துடன் ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா 40,000 டன் கோதுமையை அனுப்பி வைத்து உணவு பாதுகாப்பையும் உறுதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via

More stories

Logo