பிரபல நடிகை தூக்கிட்டு தற்கொலை

by Staff / 16-10-2022 05:39:31pm
பிரபல நடிகை தூக்கிட்டு தற்கொலை

ஏ ரிஷ்தா க்யா கெஹ்லதா ஹை இந்தி சீரியல் மூலம்சஞ்சனா சிங் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து நடிகையானவர் வைஷாலி தாக்கர். . சசுரால் சிமர் கா, ஏ வாதா ரஹா உள்ளிட்ட சீரியல்களில் நடித்திருக்கிறார். பிக் பாஸ் 14 நிகழ்ச்சி புகழ் நிஷாந்த் மல்கானியுடன் சேர்ந்து ரக்ஷாபந்தன் நிகழ்ச்சியில் வந்தது தான் வைஷாலியின் கடைசி நிகழ்ச்சி. இந்தூரில் இருக்கும் தன் வீட்டில் வைஷாலி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வைஷாலியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலை செய்து கொள்ளும் முன்பு வைஷாலி எழுதிய கடிதத்தை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் காதல் பிரச்சனையால் தற்கொலை செய்து கொண்டது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo