ஆறுமுகசாமி விசாரணை கமிஷன்..ஆய்வறிக்கை  அனல்பறக்கபோகும் அரசியல் களம்.

by Editor / 18-10-2022 10:03:05pm
 ஆறுமுகசாமி விசாரணை கமிஷன்..ஆய்வறிக்கை  அனல்பறக்கபோகும் அரசியல் களம்.

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக  ஆறுமுகசாமி விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. இன்று துவங்கிய சட்டசபைகூட்டத்தில் ஆறுமுகசாமி ஆணையத்தின் இறுதி ஆய்வறிக்கை  தாக்கல் செய்யப்பட்டது.அந்த அறிக்கையில் வி.கே.சசிகலா, கே.எஸ்.சிவகுமார், அப்போதைய சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர். அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்கள் ஒய்.வி.சி. ரெட்டி மற்றும் டாக்டர் பாபு ஆபிரகாம், அப்போதைய தலைமை செயலாளர் டாக்டர் ராமமோகன ராவ் ஆகியோர் மீது விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அதேபோல் அப்பல்லோ மருத்துவமனையின் தலைவர் டாக்டர் பிரதாப் சி.ரெட்டி தொடர்பாக அரசாங்கம் முடிவு செய்து விசாரிக்கலாம் என்றும் ஆணையத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜெயலலிதா மரண விவகாரத்தில் ஆறுமுகசாமி ஆணைய விசாரணை அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்ட 8 நபர்கள் மீதும்  நடவடிக்கை எடுக்க சுகாதாரத்துறை செயலாளருக்கு தலைமைச்செயலாளர் வெ.இறையன்பு உத்தரவிட்டுள்ளார். சில குறிப்பிட்ட நபர்களுக்கு எதிராக ஆணைய அறிக்கையின் பரிந்துரை மீது சட்ட வல்லுநர்கள் ஆலோசனை பெற்று நடவடிக்கை எடுக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதால் அரசியல்களம் சூடுபிடிக்கத்தொடங்கியுள்ளது.மேலும் பாராளுமன்றத்தேர்தலை கருத்தில் கொண்டு அரசியல்கட்சிகள் காய்நகர்த்திவரும் நிலையில்  ஆறுமுகசாமி ஆணையத்தின் இறுதி விசாரணை அறிக்கை அரசியலில் அனலை உருவாக்கும் என்பதில் ஐயமில்லை.

 

Tags :

Share via