தேவர் ஜெயந்தி விழாவுக்கு இபிஎஸ் செல்லமாட்டார்

by Staff / 26-10-2022 02:08:25pm
தேவர் ஜெயந்தி விழாவுக்கு இபிஎஸ் செல்லமாட்டார்

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் 115-வது தேவர் ஜெயந்தி மற்றும் குரு பூஜை விழா மிகச் சிறப்பாக நடைபெற ஏற்பாடுகள் நடந்து வருகிறது. பசும்பொன் தேவர் நினைவிடத்தில் சமுதாய மக்கள் மட்டுமின்றி பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் நேரில் சென்று மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்துவார்கள். இந்த நிலையில், தேவர் நினைவிடத்திற்கு மரியாதை செலுத்த அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செல்லவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் சென்னை நந்தனத்தில் உள்ள தேவர் சிலைக்கு மரியாதை செலுத்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via