மெட்ரோ ரயிலில் பயணிக்க வாட்ஸ்-அப் மூலம் டிக்கெட்

by Staff / 03-11-2022 12:20:57pm
மெட்ரோ ரயிலில் பயணிக்க வாட்ஸ்-அப் மூலம் டிக்கெட்

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கன்னட ராஜ்யோத்சவா தினத்தையொட்டி மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய வாட்ஸ்-அப் மூலம் டிக்கெட் வினியோகம் செய்ய நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி, நேற்று முன்தினம் மெட்ரோ ரயிலில் பயணிகள் வாட்ஸ்-அப் மூலம் டிக்கெட் எடுத்து பயணிக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். அதன்படி, ராஜ்யோத்சவா தினத்தில் மெட்ரோ ரயில்களில் 1,669 பயணிகள் வாட்ஸ்-அப் மூலமாக டிக்கெட் எடுத்து பயணம் செய்திருந்தார்கள். அத்துடன் வாட்ஸ்-அப் மூலமாக டிக்கெட் எடுத்து மெட்ரோ ரயிலில் பயணிக்க 14 ஆயிரத்து 400 பேர் புதிதாக இணைந்திருப்பதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via