இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் சூரிய அடுப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.

by Editor / 22-12-2022 08:14:27am
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட்  சூரிய அடுப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.

எல்பிஜி சிலிண்டர் அல்லது மின்சாரம் இல்லாமல், உணவு சமைக்க இந்தியன் ஆயில் நிறுவனம் புதிய சமையல் அடுப்பை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரவுள்ளது.

சமையல் எரிவாயுவின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. விலைவாசி உயர்வால் சிரமப்படும் மக்களுக்கு இது பெரும் சிக்கலாக மாறி வருகிறது. கேஸ் சிலிண்டர்களின் பயன்பாட்டைக் குறைக்க பலர் மின்சார அடுப்பை பயன்படுத்துகிறார்கள். ஆனால் மின் பயன்பாடு இதில் அதிகம் என்பதால், அதிக கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது.

எனவே, கேஸ் சிலிண்டர் மற்றும் மின்சார அடுப்பு ஆகியவை மக்களுக்கு ஒரு பட்ஜெட்-பஸ்டர் என்பதில் சந்தேகமில்லை. அத்தகைய சூழ்நிலையில் இன்று நாம் ஒரு புதிய அடுப்பை பயன்படுத்தி செலவைக் குறைக்க முடியும். அதன் பயன்பாட்டிற்கு கேஸ் சிலிண்டர் அல்லது மின்சாரம் தேவை இல்லை.

இதற்காக நீங்கள் ஒரு முறை மட்டும் 12,000 ரூபாய் செலவழித்தால் போதும். விலைவாசி உயர்வில் இருந்து நிவாரணம் அளிக்கும் வகையில், எரிவாயு, மின்சாரம் இல்லாமல் உணவு சமைக்கும் சிறப்பு தொழில்நுட்பத்தை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (ஐஓசிஎல்) பழைய சோலார் அடுப்புகளிலிருந்து முற்றிலும் மாறுபட்ட சூர்யா நூதன் என்ற சூரிய அடுப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.

பழைய சோலார் அடுப்பை மேற்கூரையில் அல்லது வெயிலில் வைக்க வேண்டும். ஆனால் இந்த சூர்யா நூதன் அடுப்பை சமையலறையிலேயே அமைக்கலாம். இதை நாம் இரவிலும் பயன்படுத்தலாம். முன்பே குறிப்பிட்டது போல சூர்யா நூதன் சோலார் ஸ்டவ் மற்ற சூரிய அடுப்புகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. இந்த அடுப்பில் இரண்டு அலகுகள் கிடைக்கும். அவற்றில் ஒன்று சமையலறையிலும் மற்றொன்று வெளியில் வெயிலிலும் வைக்கப்படும். இது பகலில் ஆற்றலைச் சேமித்து, இரவிலும் சீராக வேலை செய்கிறது.

சூர்யா நூதன் சோலார் ஸ்டவ் இரண்டு வகைகளில் வருகிறது. ஒன்று ரூ.12,000 மற்றும் டாப் வேரியண்ட் ரூ.23,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL) மூலம் இன்னும் சந்தையில் அறிமுகப்படுத்தப்படவில்லை. இதுவும் விரைவில் சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அடுப்பை இந்தியன் ஆயில் கேஸ் ஏஜென்சி மற்றும் பெட்ரோல் பம்ப் ஆகியவற்றில் வாங்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட்  சூரிய அடுப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.
 

Tags :

Share via