மின்சாரம் பாய்ந்து 5 பசுக்கள் பலி

by Staff / 26-12-2022 03:58:33pm
மின்சாரம் பாய்ந்து 5 பசுக்கள் பலி

செய்யூர் அருகே தண்ணீர் பந்தல் கிராமத்தைச் சேர்ந்த நான்கு பேர், பசு மாடுகள் வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர். வழக்கம் போல மாடுகளை மேய்ச்சலுக்காக அருகே உள்ள பாளையூர் கிராம வயல்வெளி பகுதிக்கு ஓட்டிச் சென்றனர்.அப்போது, பாளையூர் கிராமத்தைச் சேர்ந்த மரியன் அந்தோணி என்பவருக்கு சொந்தமான நிலத்தில் 'மின் மோட்டார்'களுக்கு மின்சாரம் செல்லும் மின் கம்பி அறுந்து விழுந்துள்ளது.மேய்ச்சலுக்கு சென்ற மாடுகளின் கால்கள் மின் கம்பிகள் மீது பட்டதில் மின்சாரம் பாய்ந்து, மகேந்திரன் என்பவருக்கு சொந்தமான இரண்டு பசு மாடு மற்றும் விநாயகம், வெங்கடேஷ், மாரி என்பவருக்கு சொந்தமான மூன்று பசு மாடுகள் என மொத்தம் ஐந்து பசு மாடுகள் உயிரிழந்தன.

 

Tags :

Share via

More stories

Logo