கச்சா எண்ணெய்யின் விலை குறைந்துள்ள நிலையில் பெட்ரோல், டீசல் விலை குறையுமா?

by Editor / 07-01-2023 08:30:16am
கச்சா எண்ணெய்யின் விலை குறைந்துள்ள நிலையில் பெட்ரோல், டீசல் விலை குறையுமா?

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய்யின் விலை குறைந்துள்ள நிலையில் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் விற்பனையில் லிட்டருக்கு ரூ.10 லாபம் பார்ப்பதாக அறிக்கை வெளியாகியுள்ளது. ஆனால் நுகர்வோருக்கு பெட்ரோல் விலை குறைக்கப்படாமலேயே இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள எண்ணெய் நிறுவனங்கள், கடந்த கால நஷ்டத்தை ஈடு செய்வதற்காக பெட்ரோல் விலை குறைக்கப்படவில்லை. மேலும் டீசல் விலையால் ரூ.6.5 இழப்பு ஏற்படுகிறது என்றும் கூறியுள்ளன. கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் பேரலுக்கு 116.01 டாலர்கள் விற்ற கச்சா எண்ணெய் தற்போது 78.09 க்கு மட்டுமே விற்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via