106 நவீன நெல் சேமிப்புத் தளங்கள் திறப்பு

by Staff / 11-02-2023 12:56:31pm
106 நவீன நெல் சேமிப்புத் தளங்கள் திறப்பு


கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் தமிழ்நாட்டின் 8 மாவட்டங்களில் ரூ. 105.08 கோடி மதிப்பீட்டில் 1,42,450 மெட்ரிக் டன் கொள்ளளவில் மேற்கூரையுடன் அமைக்கப்பட்டுள்ள 106 நவீன நெல் சேமிப்புத் தளங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், காணொளி வாயிலாக திறந்து வைத்தார். இதில், துறை சார்ந்த செயலாளர்கள், அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

 

Tags :

Share via