மீண்டும் முதலிடம் பிடித்தார் மஸ்க்

by Staff / 28-02-2023 04:13:48pm
மீண்டும் முதலிடம் பிடித்தார் மஸ்க்

ட்விட்டரும், டெஸ்லா சி.இ.ஓவுமான எலான் மஸ்க் உலகின் பணக்காரர்கள் பட்டியலில் மீண்டும் முதல் இடத்திற்கு வந்தார். மூன்று மாதங்களுக்கு முன் முதலிடத்தில் இருந்த மஸ்க், தொடர்ந்து சரிவை சந்தித்து கீழே இறங்கினார். இந்நிலையில் அவரது டெஸ்லா நிறுவன பங்குகள் மீண்டும் உயர்வை சந்தித்ததால் தற்போது 187.1 பில்லியன் டாலருடன் எலான் மஸ்க் முதலிடத்தை பிடித்துள்ளார். இந்த அறிக்கையை ப்ளூம்பெர்க் இண்டெக்ஸ் அமைப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு முன் பிரெஞ்ச் தொழிலதிபர் பெர்னார்ட் அர்னால்ட் முதலிடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via