நடிகர் அஜித்தின் தந்தை உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார்.

by Editor / 24-03-2023 09:31:58am
நடிகர் அஜித்தின் தந்தை உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார்.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித்குமார். அவரின் தந்தை பி.சுப்ரமணியம் இன்று காலமானார். கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். அஜித்தின் தந்தை மரணமடைந்த செய்தி அறிந்த ரசிகர்கள் சோகத்தில் மூழ்கி உள்ளனர். சமூக வலைதளங்கள் வாயிலாக அஜித்துக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.இன்று அவரது உடல் பெசன்ட் நகர் மயானத்தில் அடக்கம் செய்யபபட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

Tags :

Share via