ரூ.1000 உதவித் தொகை யாருக்கு

by Staff / 27-03-2023 05:27:05pm
ரூ.1000 உதவித் தொகை யாருக்கு

தமிழக 2023 - 24 நிதி ஆண்டிற்கான பட்ஜெட்டில் மகளிருக்கு மாதம் ரூ1000 உதவித் தொகை என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த பட்ஜெட்டில் அறிக்கையை நிதியமைச்சர் வாசிக்கும் போது, தகுதிவாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 திட்டம் செப்டம்பர் 15-ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார். இதனையடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில் மீனவ பெண்கள், சிறு கடை வைத்திருக்கும் பெண்கள், ஒரே நாளில் பல்வேறு இல்லங்களில் பணிபுரியும் பெண்கள், கட்டிடப் பணியாளர்கள் என பலரும் பயனடையும் திட்டமாக அமையும் என விளக்கமளித்தார்.
 

 

Tags :

Share via