கலைஞர் நினைவு நூலகம் - ஜூன் மாதம் திறப்பு

by Staff / 01-04-2023 11:53:31am
கலைஞர் நினைவு நூலகம் - ஜூன் மாதம் திறப்பு

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் நினைவாக மதுரை புது நத்தம் சாலையில் சுமார் ரூ.114 கோடி மதிப்பில் பிரம்மாண்ட கலைஞர் நினைவு நூலகமானது கட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நூலகத்தின் கட்டுமான பணிகள் முழுமையாக முடிவடைந்த நிலையில், வெளிப்பகுதியை அழகு படுத்துதல் மற்றும் புத்தகங்கள் வாங்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த பணியானது இன்னும் இரு மாதங்களுக்கும் நிறைவடையும் எனவும், ஜூன் மாதம் கலைஞரின் நினைவு நூலகத்தை தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திறந்து வைப்பார் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via